தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு இயந்திரத்தின் அச்சாணிகளாகத் திகழும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்துவகைத் தற்காலிக , நிரந்தரப் பணியாளர்களை ஒருங்கிணைத்து , அவர்களது வாழ்வாதாரம் மற்றும் நலத்தைக் காக்கக் துணைநிற்பதற்கும் ,சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கும் கல்வி, மருத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளைச் செய்வதற்காகவும் , தொடங்கப் பெற்ற இந்திய தேசம் தழுவிய அளவிலான மாபெரும் அமைப்புதான், அனைத்து ஆசிரியர்கள் அனைத்துப் பணியாளர்கள் சங்கம் (ALL TEACHERS ALL EMPLOYEES ASSOCIATION).இது தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற சிறப்பிற்குரியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தோற்றுவாய்க் கொண்ட அனைத்து ஆசிரியர்கள் அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் முதல் மாநிலத் தலைவராக, காரமடை மேல்நிலைப் பள்ளியின் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் திரு.மு.தினேஷ் யாளி பதவி வகிக்கிறார்.சங்கத்தின் முதல் மாநிலப் பொதுச் செயலாளராக கோயம்புத்தூர் மாநகராட்சி வருவாய்த் துறையில் பணிபுரியும் திரு.மு.கிருஷ்ணன் அவர்கள் பதவி வகிக்கிறார்.
